யாழ்ப்பாணத்தில் தந்தை கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த 4 வயது சிறுமி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் யாழ் கொடிகாமம், கெற்பெலி பகுதியை சேர்ந்த சிறுமியே பாதிக்கப்பட்டார். இரட்டை குழந்தைகளில் ஒருவரான சிறுமி வீட்டுக்கு வெளியில் சென்றுள்ளார்.

மதுபோதையில் இருந்த தந்தை, யாருக்கும் சொல்லாமல் ஏன் வீட்டுக்கு வெளியில் சென்றாய் என கேட்டு, இரும்புக் கம்பியினால் சிறுமியை தாக்கியுள்ளார். இதில் சிறுமியின் கை, காலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில்,அன்று இரவே சிறுமி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று, மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தந்தையை கைது செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.