யாழ்.பருத்தித்துறை – குஞ்சர்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதான மாணவன் உயிரிழந்த நிலையில் மற்றொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று பருத்தித்துறை – குஞ்சர்கடைப் பகுதியில் காலையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவருடன் பயணித்த சிவநேசன் கலையொளி (வயது 15) என்பவரே முகம் உட்பட பல பகுதிகளில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் மோட்டார் சையிக்கிளில் பயணித்த வேளை மாடு குறுக்காக பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் மாட்டுடன் மோதுண்டு பின்னர் மின்சார கம்பத்துடன் மோதியதில் விபத்து நடைபெற்றுள்ளது.

அதேவேளை உயிரிழந்த மாணவன் தற்போது நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.