யாழ்.வடமராட்சி திக்கம் பகுதியில் 1கிலோ 900கிராம் கஞ்சாவுடன் மூவர் இன்று வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி, திக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினர் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 1 கிலோ 900 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வடமராட்சி திக்கம், தும்பளை,மற்றும் பலாலி அன்ரனிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியையும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Von Admin