• Di. Nov 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெதுப்பக உணவுகளின் விலைகளை அதிகரிக்க வாய்ப்பு.

Jun 6, 2022

எதிர்காலத்தில் பன் உட்ளிட்ட வெதுப்பக உணவுகளுக்கான விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ரொட்டி தவிர்ந்த அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் பேக்கரி உரிமையாளர்கள் 12 சதவீத வற் வரி செலுத்த வேண்டியிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வற் வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒரு பன் விலையை பத்து ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறு பேக்கரி உரிமையாளர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், அனைத்து பேக்கரி உரிமையாளர்களில் 60 சதவீதத்தினர் உரிய வரியை செலுத்த வேண்டும் என்றார்.

மேலும், பேக்கரி உரிமையாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பேக்கரி தயாரிப்புகளுக்கு மேலதிகமாக, பேக்கரி உரிமையாளர்கள் மாஜரின் மற்றும் பால் பவுடர் போன்ற மூலப்பொருட்களுக்கு 12 சதவீத வற் வரி செலுத்துகின்றனர். எனவே பேக்கரி பொருட்களுக்கு வற் வரியை நீக்கி நிவாரணம் வழங்க வேண்டுமென பேக்கரி உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சுமார் 2000 சிறிய அளவிலான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed