எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(7) உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மட்டுமன்றி உலகலாவிய ரீதியில் எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையால் எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இரண்டு மூன்று நாட்களில் செய்து முடிக்கும் காரியம் அல்ல எனவும், இந்த சவாலை அற்புதங்களால் செய்ய முடியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மாதம் ஒன்றுக்கு 500 மில்லியன் டொலர் எரிபொருளுக்காக நாடு செலவிடுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Von Admin