யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்திருக்கின்றார்.

இன்றைய தினம் காலை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது சடுதியாக குளவிகள் இவரை கொட்டிய நிலையில் மயக்க மடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் சூசைப்பிள்ளை சகாயராசா (வயது64) என அடையாளம் காணப்பட்டார்.