• Di.. Juli 8th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிகரித்த முட்டையின் விலை?

Juni 11, 2022

இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மக்காச்சோள தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் இந்த நிலைக்கு காரணம் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

விலங்கு தீனிக்காக வருடந்தாந்தம் 300 மில்லியன் டொலர் தேவைப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மாதாந்தம் 30 மில்லியன் டொலராவது விலங்கு உணவிற்காக வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விற்பனை விலை 50 ரூபாயை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.