சுவிட்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

இலங்கையை சேர்ந்த சாரங்கி சில்வா (26 வயது) நீளம் பாய்தலில் முதலிடம் பெற்று (6.33 மீற்றர்) தங்க பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

அதேசமயம் இலங்கைக்கு பெருமை சேர்த்த சாரங்கி சில்வா இவ்வாண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியிலும் விளையாட தகுதி பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Von Admin