• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை.

Jun 12, 2022

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் முதலாக கோடைக்காலம் தொடங்கி நடந்து வந்தாலும் இடையே ஏற்பட்ட புயல் காரணமாக மே மாதத்தில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. தற்போது கோடைக்கால முடிய உள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது.

இந்நிலையில் 13 முதல் 15 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதன்படி தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று எச்சரித்துள்ளது. 

அதோடு இன்றும் நாளையும் லட்சத்தீவு தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா வட ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடலில் சூறாவளி காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed