யாழ்ப்பாணம் – வடமராட்சியின், மாக்கிரான் பகுதியில் நேற்று அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டில் இருந்தவர்களை வாளால் வெட்டியுள்ளனர்.

அத்துடன், அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் ஆண்கள் இருவரும் பெண் ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Von Admin