அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா முதல் ஐந்து இலட்சம் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கான இயலுமையும், குறித்த வியாபாரிக்கு எதிராக ஆறு மாதச் சிறைத் தண்டனையை விதிப்பதற்கான இயலுமையும் உள்ளது என நுகர்வோர் விவகார மற்றும் தகவல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் மற்றும் விலைப் பட்டியலைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிரான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்