உரும்பிராயில் வாழைத்தோட்டத்திற்குள்ளிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளuது.

உரும்பிராய் கிழக்கு, சிவன் வீதியிலுள்ள வாழைத் தோட்டத்திற்குள்ளிருந்து நேற்று (12) இரவு சடலம் மீட்கப்பட்டது.

வாழைத்தோட்டத்திற்குள் ஒருவர் நினைவிழந்திருப்பதாக பிரதேசவாசிகள் கோப்பாய் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்றனர்.

எனினும், அங்கிருந்த நபர் உயிரிழந்து காணப்பட்டார்.

இணுவில் வடக்கை சேர்ந்த துரைராசா உசாந்தன் (36) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் போதை ஊசி ஏற்றியதால் உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.

அவருடன் தங்கியிருந்த 4 இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

Von Admin