யாழ். கோண்டாவிலில் வீடொன்று உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன.

மருத்துவர் ஒருவரின் வீடொன்றிலே இவ்வாறான கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் கோண்டாவில் இராசமாணிக்கம் மண்டபத்துக்கு முன்பாக உள்ள குறித்த மருத்துவரின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பழை மருத்துவமனையில் சேவையாற்றும் இம் மருத்துவர் நேற்றுமுன்தினம் பிற்பகல் 2 மணிக்கு வீட்டில் உள்ளவர்களுடன் நிகழ்வு ஒன்றுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மாலை 5 மணிக்கு மீண்டும் வீடு திரும்பிய போது வீடுடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Von Admin