ஏ9 வீதி, கொடிகாமம் – கொயிலாமனை சந்திப் பகுதியில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.  

உயிரிழந்தவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலைய இலக்கமான 0262050222 என்ற எண்ணுக்கு  அழைப்பெடுத்து தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.   

Von Admin