டீசல் என்ற போர்வையில் தண்ணீரை கேன்களில் நிரப்பி விற்பனை செய்த சம்பவமொன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது.

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த இரண்டு நபர்களே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர்.

60 லீற்றர் டீசலை விற்பனை செய்யும் போர்வையில் குறித்த இரண்டு பேரிடமும் சந்தேக நபர் 24000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறிய வான் ஒன்றில் இளநீர் விற்பனை செய்யும் நபர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து நாட்களாக டீசலுக்காக வரிசையில் காத்திருந்து களைப்படைந்த காரணத்தினால், கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யும் டீசலை கொள்வனவு செய்ய இந்த இரண்டு நபர்களும் இணங்கியுள்ளனர்.

டீசல் என்ற போர்வையில் மூன்று கேன்களில் தண்ணீரை நிரப்பி இருவரிடமிருந்தும் 24000 ரூபா பணம் பெற்றுக் கொண்ட நபர் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கேன்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக அதனை பரீட்சித்த போது அது டீசல் அல்ல நீர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

Von Admin