தமிழ்நாட்டிலுள்ள காவிரி ஆற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மிதந்து வந்தபோது அதை பார்த்த மீனவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்றையதினம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக வந்த மாணவி தருமபுரி நெல்லி நகர் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் பிரியங்கா (22) என விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் மாணவி காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? வீட்டு பிரச்சினையா? கல்லூரியில் ஏதேனும் தொந்தரவை சந்தித்தாரா ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Von Admin