• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகர் கொடியேற்றம்.

Jun 17, 2022

யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் வெள்ளிக்கிழமை(17.6.2022) முற்பகல்-10.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

தொடர்ந்தும் 12 தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சத்தில் எதிர்வரும்-22 ஆம் திகதி புதன்கிழமை வசந்த உற்சவமும், 25 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-5 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-7.30 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 27 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-11 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-11 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-7.30 மணிக்குக் கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் காலை உற்சவம் காலை-8.30 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல்-11.15 மணிக்கு வசந்தமண்டபப் பூசை இடம்பெற்றுப் பிற்பகல்-12.30 மணிக்கு நிறைவுபெறும். மாலை-6.30 மணிக்குப் பூசை, 6.45 மணிக்குத் தம்ப பூசை, இரவு-7.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசை இடம்பெற்று இரவு-9.30 மணிக்கு நிறைவுபெறும்.

இதேவேளை, மஹோற்சவ காலங்களில் தினசரி மகேஸ்வர பூசை(அன்னதானம்) இடம்பெறும் எனவும் ஆலய பரிபாலன சபையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed