கஹதுடுவ – தொலேக்கடே சந்தியில் உள்ள மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் இரண்டு மகள்கள் தீப்பற்றி எரிந்துள்ளனர்.

நேற்று (25) இரவு 10 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பலத்த தீக்காயம் காரணமாக தம்பதி உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுமிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் 41 வயதுடைய தந்தையும் 38 வயதுடைய தாயும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுமிகளில் நான்கு வயது சிறுமி லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றைய 19 வயதுடைய மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Von Admin