சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கடற்படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்திலேயே அதிகாலை வேளையில் இவர்கள் கைதாகியுள்ளனர். 

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இதுவரை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த சுமார் 100 பேர் நாடுகடத்தப்பட்டுள்ள அதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதற்கு முற்பட்ட 400 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Von Admin