புகலிடக்கோரிக்கையாளர்கள் மையம் ஒன்றில், வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி, திறந்தவர்களை எல்லாம் கத்தியால் குத்தியிருக்கிறார் 31 வயது நபர் ஒருவர்.

அவரும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர்தான்… Kressbronn என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கும் இடத்தில் அந்த நபர் திடீரென நடத்திய தாக்குதலில், ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார், ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.  

Von Admin