• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்திலும் ஒரே நாளில் கடவுச்சீட்டு! புதிய திட்டம் ஆரம்பம்

Jun 28, 2022

யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றில் கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு ஒருநாள் சேவை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும்.

இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் எனது பிரத்தியேக பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும்.

தற்போது கடவுச் சீட்டைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை மாற்றியமைக்கப்படும்.

இதனைத் தவிர மேலும் ஐந்து இடங்களில் பிராந்திய அலுவலகங்களையும், ஒருநாள் சேவையையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed