அரச மற்றும் தனியார் வங்கிகள் தமது சேவை நேரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளன.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அரச மற்றும் தனியார் வங்கிகளில் வார நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மாத்திரமே கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுமென குறித்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.