கிளிநொச்சியில் உள்ள குளம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (30) மாலை கிளிநொச்சி அம்பாள்குளத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மாங்குளம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ரகு என்ற இளைஞர் என பொலிஸாரின் விசாரனையில் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்த நிலையில் இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

Von Admin