பளை பகுதியில் பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் (28-06-2022) பளை  – புலோப்பளை கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தந்தையான ஞானபிரகாசம் அமலதாஸ் (வயது-56) என்பவரே அவார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பனை தென்னை வள தொழிலைத் தனது வாழ்வாதாரத் தொழிலாக கொண்ட குறித்த குடும்பஸ்தர் பனை மரத்தின் கீழ் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

நீண்ட நேரமாக தொழிலுக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி தேடி சென்ற வேளை பனை மரத்தின் கீழ் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டடு பின் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Von Admin