யாழ்ப்பாணத்தில் றம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று பகல் 02 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ் காங்கேசன்துறையை சேர்ந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Von Admin