தண்ணீர் வாளிக்குள் ஒன்றரை வயது பெண் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெருமு் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது இன்று யாழ்ப்பாணம்- பொன்னாலைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த குழந்தை பொன்னாலை – சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த யசோதரன் யஸ்மிகா எனும் ஒன்றரை வயது பெண் குழந்தையே என தெரியவந்துள்ளது.

வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை எதிர்ப்பாராத விதமாக 20 லீற்றர் வாளிக்குள் விழுந்த கரண்டியை எடுக்க முற்பட்ட வேளை குழந்தை நீரிழ் மூழ்கியுள்ளது.

இதனையடுத்து பெற்றோர் குழந்தையை மீட்டு மூளாய் வைத்தியசாலையில் சேர்த்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.