இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தேவாரபாடல்பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று நடைபெறவுள்ளது.

மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனையடுத்து, சுவாமிகளுக்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் யாகப் பூஜைகளும் நடைபெற்றன.