• Sa. Dez 14th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் ஒருவர் பலி

Jul 7, 2022

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த பேருந்தில் பயணம் செய்திருந்த இளைஞர் ஒருவர் பருத்தித்துறை முதலாம் கட்டை சந்தி நிறுத்தத்தில் இறங்கியதும் மயக்கி சரிந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டிருந்தது. அங்கு பரிசோதிக்கப்பட்ட போது இளைஞர் உயிரிழந்தமை தெரியவந்தது.

அதன் பின்னர் இளைஞனின் உடலம் பிரதேப்பரிசோதனை மேற்கொள்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பேருந்தில் அதிக பயணிகள் பயணம் மேற்கொண்டதனால் கூட்ட நெரிசல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed