யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெற்பெலி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் தந்தையும், மகளும் காயமடைந்துள்ளனர்.

கெற்பெலியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த மதுபோதை நபர் வாள்வெட்டை நடத்தியுள்ளார்.

52 வயதான தந்தையும், 18 வயதான மகளும் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தந்தை மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

Von Admin