• Mi. Sep 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

டாட்டூ ஆசையால் கண் பார்வையை இழந்த பெண்.

Jul 9, 2022

ஆஸ்திரேலிய நாட்டில் தன் கண்களை நீல நிறமாக மாற்ற நினைத்த பெண்ணிற்கு பார்வை பறிபோன சம்பவம் நடந்திருக்கிறது.

ஆஸ்திரேலிய நாட்டில் வசிக்கும் ஆம்பர் லூக் என்ற 27 வயதான என்ற பெண் டாட்டூ போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். எனவே தன் உடல் முழுக்க சுமார் 600 டாட்டுக்குள் போட்டிருக்கிறார். தன் 16 வயதிலிருந்து உடலில் டாட்டூக்களை போட்டு வரும் அந்த பெண் அதோடு இல்லாமல், தன் கண்களில் டாட்டூ போட்டிருக்கிறார்.

அதாவது நீல நிறமாக கண்களை மாற்ற ஆசைப்பட்டிருக்கிறார். எனவே, கண்களில் டேட்டூ போட்டுக் கொள்வதற்காக நீல நிறத்திலான மையை ஊற்றியிருக்கிறார். அப்போது அவரின் கண்கள் நீல நிறமானது. இது மட்டுமல்லாமல் அவருக்கு பார்வை தெரியாமல் போனது.

ஒரு நிகழ்ச்சியில் அவர் இது குறித்து தெரிவித்ததாவது, கண்களில் மை ஊற்றிய பின் மூன்று வாரங்களாக கண் தெரியவில்லை. பார்வையை இழந்துவிட்டேன். அதன் பிறகு, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு பார்வையை பெற்றுள்ளேன் என்று கூறியிருக்கிறார். மேலும் தன் உடல் முழுக்க டாட்டூக்கள் போட்டதிலும் கண் பார்வையை இழந்ததிலும் எனக்கு வருத்தம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed