வவுனியாவில் 2,500 ரூபாய் படி 40 லீற்றர் டீசல் எரிபொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (08) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் 2,500 ரூபாய் படி 40 லீற்றர் டீசலை விற்பனை செய்தமையை கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிஸார் அவரது வீட்டிலும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வசித்து வந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.