இந்திய அரசினால் வழங்கப்படும் யூரியா உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு மூடை உரத்தினை 10,000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்திய கடன் வசதியின் கீழ், ஓமனிலிருந்து யூரியா உரம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் தற்போதைய நிலையில் தாமதம் ஏற்படுகின்ற போதிலும், கூடிய விரைவில் உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.

Von Admin