யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்  தெரிவித்துள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர்,  யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர், மற்றும் பிரதிநிதிகள் யாழ் மாவட்ட செயலகத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு தீர்வாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெதுப்பக உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக இடர்பாடுகள் இருந்து வருவதனால் பல வெதுப்பகங்கள் முற்றிலுமாக இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இவற்றை சரி செய்யும் முகமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Von Admin