வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று பிள்ளையார் முருக  பெருமானுடன் உள்வீதியுலா வந்த நாக பூசணி அம்மன் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.


தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் காட்சியை கண்டு களித்தனர்.