இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் புதன்கிழமை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா மற்றும் பிற அவசரமற்ற பயணங்கள் ஊக்கமளிக்கவில்லை என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அரசியல் சூழ்நிலை குழப்பமடைந்துள்ளதுடன், பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலைமை மேலும் மோசமடை கூடும் என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,  அரசுக்குஎதிரான போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவசரகால நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், இலங்கைக்கான தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.     

Von Admin