யாழில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி குறித்த பகுதியையுடைய 14 வயது சிறுமி என பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தச்சிறுமி வீட்டில் யாருமில்லாத தருணத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் குறித்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதணைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Von Admin