பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம் மாற்றம் உண்டாகும். மரபெட்டிக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு.

பெட்டியில் பணத்தை வைச்சா மட்டும் பணம் பெருகிடுமானு கேட்கலாம்!! ஆமாம் பெருகும். உதாரணத்திற்கு சாதாரணமாக உங்களால் சில்லறைகள் கூட சேமிக்க முடியாது. ஆனால் அதுவே ஒரு உண்டியல் வாங்கி வீட்டில் வைத்து பாருங்கள். கட கடவென சில்லறைகள், நோட்டுகள் என்று ஆர்வமாக போட்டு கொண்டு வருவோம். சிறிது காலத்திலேயே அந்த உண்டியலும் நிரம்பிவிடும்.

வாஸ்துவில் இதனை பண ஈர்ப்பு விதி என்கிறார்கள். ஒரு பொருளை நீங்கள் வைக்கும் திசை உங்கள் வாழ்க்கையில் சில மாறுதல்களை உண்டு பண்ணும். உளவியல், அறிவியல், ஆன்மீகம் அல்லது ஜோதிடம் எந்த பேரில் சொன்னாலும் பலன் மட்டும் உண்டு.

செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரன் ஒருவரது வீட்டில் வடக்கு திசையில் தான் அமர்கிறார். எனவே செல்வம் நிலைக்க மென்மேலும் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்களது பணப்பெட்டியை வடக்கு திசையில் வைப்பது நல்லது. பணப்பெட்டி அல்லது பீரோ இவற்றில் தான் பணத்தை வைக்க வேண்டும்.

ஒரு சிலர் என்ன செய்வார்கள் என்றால், பணத்தை சமையல் அறையில் கொண்டு போய் வைப்பார்கள். இன்னும் சிலர் பணம், நகைகளை பரண்மேல் கூட வைப்பார்கள். அவ்வாறு வைப்பதும் சரியான முறை அல்ல. பணத்தைப் பணமாக மட்டும் பார்க்காமல் மகாலட்சுமி ஆக பார்க்க வேண்டும். அதற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்.

பணத்தை சுற்றிலும் தெய்வீக மணம் வீச வேண்டும். பணப்பெட்டியில் அல்லது பீரோவில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி போன்ற லக்ஷ்மி அம்சம் பொருந்திய பொருட்களை வாசனைக்காக வைத்துக்கொண்டால் செல்வம் நிலையாக தங்கும்.