யாழ்ப்பாணத்தில் – மண்டைதீவு கடற்பரப்பில் இருந்து பெருந்தொகையான  போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கடற்கரையிலிருந்து 46 கிலோ கஞ்சா (14) மாலை மீட்கப்பட்டதாக  கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

கைப்பற்றப்பட்ட கஞ்சா இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட  நிலையில் கடற்படையினரை கண்டு கைவிட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.

இதேவேளை கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Von Admin