நேற்றையதினம் சீகிரிய பிரதேசத்தில் உள்ள துன்னா பிந்தி நீர்த்தேக்கத்திலில் நீராடிக்கொண்டிருந்த இளைஞனை முதலை இழுத்துச்சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனையடுத்த இன்றையதினம் (16) குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனை தந்தை காப்பாற்ற முயற்சி செய்த போதிலும் முதலை சிறுவனை இழுத்துச்சென்றுள்ளது.

இந்நிலையில் தகவலறிந்து வந்த பொலிஸார் நேற்றையதினத்திலிருந்து தேடுதலில் ஈடுபட்டு வந்துள்ளகர்.

மிகுந்த தேடுதலுக்கு பின் சிறுவன் சடலமாக மீ்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Von Admin