யாழி்ல இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த சுகாதார சேவைகள் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த 05ம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளராக பணியாற்றிவந்த கலைமதி சொல்லத்துரை (வயது 47) என விசரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகனை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Von Admin