எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம் அநுராதபுரம் – கெக்கிராவ, இபலோகம லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அவுக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.

இது குறித்து வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்த விடயமானது குறித்த நபர் அவர் நண்பருடன் எரிபொருளுக்காக காத்திரந்த வேளையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Von Admin