வீட்டாரை கத்தி முணையில் மிரட்டி வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீட்டில் நேற்றையதினம் நுழைந்த மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவு திறந்து விட்டு நான்கு முகமூடி கொள்ளையர்களை வீட்டினுள் வர வைத்துவிட்டு 20 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து வீட்டார் பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைவாக முக மூடி கொள்ளையர்களின் அங்க அடையாளங்கள் குறித்த தகவலின் அடிப்படையில் 20 , 21 வயதான இருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளை அவர்களிடம் முன்னெடுத்து வருவதாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.