யாழில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் .

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் (20) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதைப் பொருளை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பெறப்பட்ட மாதிரியில் போதைப்பொருள் நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளது .

இந்நிலையில், இளைஞனின் சடலம் நாளை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .

Von Admin