யாழில் வவுனியாவைச்சேர்ந்த சிறுவன் குடும்பத்தாருடன் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்று முன்தினம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவனுக்கு நாடி வைத்தியம் உரும்பிராய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் உயிரிழந்ததையடுத்து பொலிஸார் சடலத்தை உடற்கூறு பரிசேதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் முடிவுகளில் சிறுவனுக்கு குறுதி புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இச்சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் நாடி சிகிச்சை செய்து வந்ததால் இந்நிலமை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Von Admin