• Mi.. Feb. 11th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெள்ளவத்தையில் மாடியிலிருந்து விழுந்து ஒருவர் பலி!

Juli 22, 2022

வெள்ளவத்தை விவேகானந்தா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இன்று காலை தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டராக பணியாற்றி வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த நபர் நான்காவது மாடி படிக்கட்டில் இருந்து முதல் மாடிக்கு விழுந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.