பிரசித்திபெற்ற யாழ்.சுன்னாகம் கதிரமலைச் சிவன் சொர்ணாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் -இன்று 23 ஆம் சனிக்கிழமை காலை-9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ்வாலய மஹோற்சவம் சிறப்புற இடம்பெற உள்ளதுடன் ஆறாம் திருவிழாவான 28 ஆம் திகதி கப்பற் திருவிழா நாளன்று சுமங்கலிப் பிரார்த்தனைகள், பூசைகள் சிறப்புற நடைபெறும்.

இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-30 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், எதிர்வரும்-31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-5 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்-1 ஆம் திகதி திங்கட்கிழமை ஆடிப்பூர தினத்தன்று மாலை-5 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவமும், தீர்த்தோற்சவ நாளன்று அம்பாளுக்குச் சிறப்பு நைவேத்தியங்கள் படைக்கப்பட்டுப் பூப்புனித நீராட்டு வைபவ ஆடிப்பூர உற்சவமும் சிறப்பாக இடம்பெறும்.

அன்றையதினம் இரவு கொடியிறக்க உற்சவமும் இடம்பெற உள்ளதாக மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.

Von Admin