பொரலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல் வீதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றிலிருந்து பெட்ரோல் திருடிய சம்பவம் தொடர்பில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளதாக பொரலை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் பொரலையைச் சேர்ந்த 40 வயது நபரே கொல்லப்பட்டுள்ளார்.

அத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.