யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை தெற்குப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் (24-07-2022) ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் வசித்து வந்த 64 வயதான 5 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Von Admin