அபிஷேககந்தன் என அழைக்கப்படும், வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 04.07.2022 அன்று ஆரம்பமான திருவிழாவானது 28.07.2022 அன்று தீர்த்த திருவிழாவுடன் இனிதே நிறைவடையும்.

கருவரையில் வீற்று அருள்பாலித்து விளங்கும் அபிஷேககந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்கள் பீடத்தில் உள்வீதியுடாக வலம் வந்து வெளிவீதியில் தேரேரி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இத் திருவிழாவினை ஆலய பிரதம குரு து.இரத்தினசபாவதிக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர். இதில் பலபாகங்களில் இருந்து பக்தர் அடியார்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Von Admin