அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக பயணிக்க முயன்ற 12 பேர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 8 ஆண்களும் 4 பெண்களும் தங்கியிருந்த வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் 

கைது செய்யப்பட்ட 12 பேரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு ஆரம்ப கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Von Admin